அப்பாவுடன் நடிக்கிறார் ஷிவானி

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகளின் இரு மகள்களும் நடிகை ஆகிவிட்டார்கள். மூத்த மகள் ஷிவானி தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அன்பறிவு படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இளைய மகள் ஷிவாத்மிகா ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் ஷிவாத்மிகா அடுத்து தந்தை டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடிக்கிறார். தற்போது தயாரிப்பில உள்ள சேகர் என்ற தெலுங்கு படத்தை ராஜசேகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவானி டாக்டர் ராஜசேகரின் மகளாக நடிக்கிறார். ஆனால் ஹீரோயின் இல்லை. தந்தையும் மகளும், திரையிலும் அப்படியே தங்களை பிரதிபலித்திருக்கிறார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜீவிதா.

Related Stories: