மும்பை: காதலருக்கு சூனியம் வைத்ததாக பாலிவுட் நடிகை சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தொலைக்காட்சி தொடர்கள், பாலிவுட் படங்கள், ஓடிடியில் வெப் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை திவ்யங்கா திரிபாதி. சில வருடங்களாக திவ்யங்கா, நடிகர் சரத் மல்கோத்ராவை காதலித்தார். இருவரும் 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக திவ்யங்காவை சரத் பிரிந்துவிட்டார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட திவ்யங்கா, மதுக்கு அடிமையானார்.
இந்நிலையில் தனது காதல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியது: காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையானது உண்மைதான். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபட்டு வந்தேன். ஆனாலும் சரத்தை என்னால் மறக்க முடியவில்லை. இதனால் காதலைக் காப்பாற்றவும், சரத்தை மீண்டும் எனது வாழ்க்கைக்குள் கொண்டு வரவும் சூனியத்தை நாடினேன். அது தவறு என்பது தெரியும். ஆனாலும் சிலரது தூண்டுதலால் இந்த காரியத்தை செய்தேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து மனவேதனையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது வாழ்க்கையில் இன்னொரு காதலை எதிர்பார்க்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
