மும்பை: விவாகரத்து வழக்கில் செலினா ஜெட்லி, தனது கணவரிடம் இருந்து ரூ. 100 கோடி நஷ்டஈடு மற்றும் மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டுள்ளார். மாடல் அழகியும் பிரபல நடிகையுமானவர் செலினா ஜெட்லி, இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஓட்டல் அதிபர் பீட்டர் ஹேக் என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த 15 வருட திருமண வாழ்க்கையில் கணவர் தன்னை பலவிதமாக கொடுமைப்படுத்தியதாக செலினா ஜெட்லி, மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே செலினாவிடமிருந்து விவாகரத்து கேட்டு பீட்டர் ஹேக் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து தனக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு மற்றும் மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் என செலினா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு தரப்பின் வருமான விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, ஜனவரி 27ம் தேதிக்கு அடுத்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
