தள்ளிப்போன பிரபுதேவா படம்

பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.

இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர். இது பற்றி தயாரிப்பு தரப்பில் கூறும்போது, ‘எதிர்பாராத காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. படம் பின்னர் வெளியாகும்’ என்றனர்.

Related Stories: