மிஷ்கினை கழற்றிவிட்ட விஷால்

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் நடிப்பில் இயக்க தொடங்கினார் மிஷ்கின். படத்தை விஷாலே தயாரித்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த படத்திலிருந்து மிஷ்கினை விஷால் நீக்கினார். குறிப்பிட்ட சில காட்சிகளுக்கே அதிக செலவு செய்துவிட்டார் மிஷ்கின் என்பதே விஷாலின் குற்றச்சாட்டாக இருந்தது. இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்குவேன் என விஷால் அறிவித்தார். இந்த பிரச்னை நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

விஷால் படத்தை தொடங்காமலே இருந்தார். இதற்கிடையே விஷாலுடன் மீண்டும் இணைய தயார் என மிஷ்கின் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதற்கு விஷால் பதிலளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் துவங்கும் என விஷால் அறிவித்துள்ளார்.

இதற்கான விளம்பரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் விஷாலே படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மிஷ்கினை படத்திலிருந்து விஷால் கழற்றிவிட்டிருக்கிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக இந்தி நடிகை லவ்லி சிங் நடிக்க உள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா, ரகுமான், கவுதமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Related Stories:

More