இந்தியாவுக்கு நன்றி சொன்ன மணி ஹீஸ்ட் குழு.!

மணி ஹீஸ்ட் வெப் தொடருக்கு இந்தியாவில் தான் மிக அதிக பார்வையாளர்கள் உள்ளனர். இதனை அடுத்து இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றி கூறிய ‘மணி ஹீஸ்ட்’ குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் புரபொசர் கேரக்டரில் நடித்த அல்வாரோ மோர்ட்டி பேசியபோது ‘இந்தியாவில் மணி ஹீஸ்ட் தொடரை மாபெரும் ஹிட் ஆக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும், இந்த தொடர் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இந்த தொடரில் நடித்தவர்கள் ஒவ்வொருவராக நன்றி தெரிவிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

மேலும் இன்னொரு வீடியோவில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்த ஹெலன்ஸ்கி, ‘கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்றும் குறிப்பாக கோவாவுக்கு வர வேண்டும் என்று எனக்கு ஆசை’என்றும் தெரிவித்தார். இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Related Stories:

More