அடுக்குமாடி குடியிருப்பில் தீ; ரகுல் பிரீத் உயிர் தப்பினார்

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், ரகுல் பிரீத் சிங். கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடிக்கும் அவர், அந்தந்த மாநிலங்களில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது தங்குவதற்காக சொந்த வீடு வாங்கியுள்ளார். ஆனால், மும்பையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிரந்தரமாக வசிக்கிறார். இந்நிலையில், அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 12வது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்தபோது ரகுல் பிரீத் சிங் வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Related Stories: