அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது தப்பா?: நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மும்பை: பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், அவருக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாலிவுட் நடிகை சாரா அலி கானும், தன்னுடைய பங்குக்கு அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அவர் சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்யப்பட்டார். உண்மையில், நேற்று காலை 10.30 மணியளவில், சாரா அலி கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்ட அடுத்த சில நொடிகளில் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது.

அதாவது, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்குக்கு பின்னர், போதை பொருள் தடுப்பு பிரிவின் கண்காணிப்பு வளையத்தில் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியலில் சாரா அலிகானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், நடிகை அனன்யா பாண்டே, அர்மான் கோஹ்லி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துள்ள நிலையில், சாரா அலிகான் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக பாலிவுட்டில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், சில ெநட்டிசன்கள் ஒரு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து ெசான்னது தப்பாப்பா? என்று பதிலும் அளித்து வருகின்றனர்.

Related Stories:

More
>