தடுப்பூசி போட மறுத்த நடிகைக்கு கொரோனா

பனாஜி: தடுப்பூசி போட மறுத்து வந்த நடிகை பூஜா பேடிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பூஜா பேடி, தற்போது காதலருடன் கோவாவில் வசித்து வருகிறார். இவர் கொரோனா தடுப்பூசி போட மறுத்து வந்தார். இந்நிலையில், பூஜா பேடி வெளியிட்ட வீடியோவில், ‘கொரோனா வைரஸ் இன்னும் ஏன் என்னை தாக்கவில்லை என்று யோசித்து வந்தேன். எல்லோரையும் தாக்கக்கூடிய இந்த வைரஸ், என்னை தாக்காமல் இதுவரை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது. நான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. நான் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல் இருப்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு’ என்றார்.

Related Stories:

More
>