பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

சென்னை: ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1965ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தில், ஜெயலலிதாவுடன் இணைந்து அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். வயது 84. வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார். நேற்று மாலையே அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, ‘வயதான காரணத்தால் உடல் நலிவடைந்த ஸ்ரீகாந்த், நேற்று திடீரென்று வாந்தி எடுத்தார். பிறகு அவர் உயிர் பிரிந்துவிட்டது’ என்றனர்.

 சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், ஸ்ரீகாந்த். ‘தங்கப்பதக்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘பைரவி’ போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கடைசியாக 2009ல் ‘குடியரசு’ என்ற படத்தில்  நடித்திருந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றினார். அவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

Related Stories:

More
>