மகனுக்கு சிபாரிசு செய்யாத கணேஷ்

டி.வியில் பிரபல மானவர், ஸ்ரீ. பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தற்போது பேராசை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த (சங்கர்) கணேஷின் மகனான இவர், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்கள் கொடுத்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி அருண் கேசவன், ஷிஹான் சரவணன் இணைந்து தயாரிக்கும் பேராசை படத்தில் ஸ்ரீ ஜோடியாக தீஷிகா நடிக்கிறார். 

ஈசன் இயக்குகிறார். சங்கர்-கணேஷ் உதவியாளர் வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசை அமைக்கிறார். 
மகன் குறித்து பேசிய கணேஷ், ‘என் மகன் ஸ்ரீ, சொந்த திறமையால் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். சில படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து, 50 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் அவருக்கு நான் யாரிடமும் சிபாரிசு செய்ததில்லை’ என்றார். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து சொல்லும் படமாக பேராசை உருவாகிறது.

Related Stories:

>