அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி; அதிகாரம் நிரந்தரமில்லை

அகமதாபாத்: ‘அதிகாரம் எப்போதும் நிலைத்து இருக்காது என்றும் அதிகாரம் ஒருநாள் பறிக்கப்படும்’ என்று அசாதுதீன் ஒவைசி கூறினார். குஜராத் மாநிலம், ஜுஹபுராவில் நேற்று நடந்த  பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்பி பேசும்போது, ‘‘2002ல் கலவரக்காரர்களுக்கு  பாடம் புகட்டியதாகவும்,  அமைதியை ஏற்படுத்தியதாகவும் அமித் ஷா கூறி உள்ளார். அமித்ஷாவிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.2002ம் ஆண்டில் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் என்னவென்றால், பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் உங்களால் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் காங்கிரஸ் எம்பி அஹ்சன் ஜாப்ரி கொல்லப்படலாம் என்பதை நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். அந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கினால்தான் அமைதி ஏற்படும்.   ஒருவரிடம் அதிகாரம் எப்போதும் நிலைத்து இருக்காது. எல்லோரிடம் இருந்து அதிகாரம் ஒருநாள் பறிக்கப்படும்’’ என்றார்….

The post அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி; அதிகாரம் நிரந்தரமில்லை appeared first on Dinakaran.

Related Stories: