நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் காதலித்து மணந்தனர். ஒரு சில ஆண்டுகளில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது அமலாபால் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமலாபால், விஜய் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் தான் காரணம். அவர்தான் அமலாபால் நடிப்பதற்கு திருமணத்துக்கு பிறகு வாய்ப்பளித்தார் என விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.