5ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் வயல்களிலிருந்து மழைநீரை வெளியேற்றும் பணி மும்முரம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அதிலிருந்து நீரினை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா மற்றும் தாளடி பயிராக நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு எனப்படும் செம்மை நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவு முறை என மொத்தம் 3 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்தில் விட்டுவிட்டு மற்றும் மிதமான மழையும், மற்றும் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது. இதனால் வயல்களிலிருந்து நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்….

The post 5ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் வயல்களிலிருந்து மழைநீரை வெளியேற்றும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: