தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!

தேவையான பொருட்கள்:மட்டன் – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 150 கிராம்பச்சை மிளகாய் – 3இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்பட்டை – 2 துண்டு லவங்கம் – 10சோம்பு – 1 டீஸ்பூன்கசகசா – 1 டீஸ்பூன்தேங்காய் துருவியது – 1 குழி கரண்டிபொட்டுக் கடலை – 2 டேபிள் ஸ்பூன்தக்காளி – 2மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியா தூள் – 2 டீஸ்பூன்எண்ணெய் – 1 குழி கரண்டிஉப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கொத்து.செய்முறை:குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டன், உப்பு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். ஆறியதும் அதனுடன் பட்டை, லவங்கம், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். பிறகு துருவிய தேங்காயை போட்டு இரண்டு சுற்று அரைத்து எடுக்கவும். குக்கரில் விசில் அடங்கியதும் மூடியை திறந்து, அடுப்பை பற்ற வைத்து தனியாத்தூள் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்க்கவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிளகாய்த்தூள் போட்டு அனலை குறைத்து மூடி வைத்து சிறிது நேரம் வேகவிடவும். தண்ணீர் சுண்டியதும் கிளறி கொத்தமல்லி கீரை தூவி இறக்கவும். சுவையான மட்டன் வறுவல் தயார்.தொகுப்பு : ஹேமலதா வாசுதேவன்

The post தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்! appeared first on Dinakaran.

Related Stories: