ஸ்ரீபிரியா, ரேவதி, ரோகிணி, சுதா கங்கரா என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் இயக்குனர்கள் இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் விரைவில் நடிகைகள் பூ பார்வதி, அனுபாமா பரமேஸ்வரன், நித்யாமேனன் இயக்குனர்கள் ஆக உள்ளனர். இந்நிலையில் பெண் இயக்குனர் குட்டி ரேவதி, ‘சிறகு’ என்ற பெயரில் புதிய படம் இயக்கியிருக்கிறார். மாலா மணியன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல், டீஸரை மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டனர்.