ஜான்வியை அவரது காதல் நடிகர் போட்டு கொடுத்த ருசிகர தகவல் நடந்துள்ளது. கடந்த ஆண்டு, தஹடக் இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி. ஜோடியாக இஷான் கட்டார் நடித்தார். இருவரும் காதல் ஜோடிகளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ரூஹ் அஃப்ஸா’ படத்தில் ஹீரோ ராஜ்குமார் ராவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் ஜான்வி. ராஜ்குமார் ராவ் மீது ஏற்கனவே ஜான்விக்கு ஒரு கண்ணாம். ஒருமுறை, ‘ஐ லவ் யூ ராஜ்குமார் ராவ்’ என்று நெட்டில் நூல்விட்டிருக்கிறார்.