இந்நிலையில் படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டைட்டில் தன்னுடையது என்று நடிகரும், இயக்குனருமான தேஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு வருடத்துக்கு முன்பே ‘டியூட்’ என்ற படத்தை நான் அறிவித்து விட்டேன். இந்நிலையில், தற்போது இந்த தலைப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது படத்துக்கு வைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து போராடும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த விஷயத்தை ஏற்கனவே நிறுவனத்திடம் சொல்லிவிட்டேன். அங்கிருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.
தற்போது தேஜ், ‘டியூட்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
