கன்னட நடிகை ருக்மணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடித்தார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் வில்லியாக நடித்த அவர், தற்போது ரசிகர்களின் புதிய ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறியுள்ளார். நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் உடன் ‘டாக்ஸிக்’, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர், அடுத்து ராம் சரண் நடிக்கும் 17வது படத்தில் நடிக்கிறார்.
இதை ‘புஷ்பா 2: தி ரூல்ஸ்’ படத்துக்கு பிறகு பி.சுகுமார் எழுதி இயக்குகிறார். ருக்மணி வசந்த் நடிக்கும் 3 படங்களும் பிரமாண்டமான முறையில் உருவாகும் பான் இந்தியா படங்கள் என்பதால், இந்திய திரையுலகினரின் பார்வை அவரது பக்கமாக திரும்பியிருக்கிறது. இதனால், தனது சம்பளத்தை பல கோடி ரூபாய்க்கு உயர்த்திவிட்டார் என்று, அவரை குறிப்பிட்டு சில தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.
