இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி: அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது: பில்கேட்ஸ் வாழ்த்து

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டதற்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் – அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு முதலில் ஒப்புதல் தந்த நிலையில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுமே 110% பாதுகாப்பானவை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டதற்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்….

The post இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி: அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது: பில்கேட்ஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: