மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபரீதம்.. ஐதராபாத் அருகே மரம் விழுந்து ஸ்கூட்டியில் சென்றவர் உயிரிழப்பு..!!

ஐதராபாத்: தெலுங்கானாவில் மருத்துவமனைக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தும்மகுண்டவை சேர்ந்தவர் ரவீந்தர். இவர் மருத்துவ சிகிசிச்சைக்காக அவருடைய மனைவி சரளா தேவியுடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்த போது சமீபத்தில் பெய்த மழையால் வலுவிழந்து காணப்பட்ட மரம் திடீரென அவர்கள் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் உயிரிழந்தார். அவரது மனைவி சரளா தேவி படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், மரம் ஆபத்தான முறையில் சாய்ந்து இருந்ததாகவும், அதிகாரிகள் இதை முன்கூட்டியே அகற்றாமல் இருந்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

The post மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபரீதம்.. ஐதராபாத் அருகே மரம் விழுந்து ஸ்கூட்டியில் சென்றவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: