அனந்த பத்மநாப சுவாமி விரதம்: ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு, சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரி நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று  ஏழுமலையான் கோயில் சந்நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு ஏழுமலையான் கோயில் கருவறையிலிருந்து சக்கரத்தாழ்வார் தெப்பகுளத்திற்கு  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு சக்கரத்தாழ்வாருக்கு தேன், பால், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் இலவச தரிசன வரிசையில் 15 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்….

The post அனந்த பத்மநாப சுவாமி விரதம்: ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: