சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ பட விழாவில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர். ரஹ்மான், தான் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் காரில் வந்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வாங்கியுள்ள மகேந்திரா e9 வகை காருடன் ஸ்டைலாக நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவர் இட்ட கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, ‘‘எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e. இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஆடியோவை நாங்கள் வடிவமைத்தோம்” எனவும் இந்த காரை தான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். அவரது மகள் கதீஜா, கமெண்ட் செக்ஷனில் ஃபயர் விட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் வாங்கியுள்ள இந்த எலக்ட்ரிக் கார் சுமார், ரூபாய் 22 லட்சத்தில் இருந்து ரூபாய் 31 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஹ்மான் எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.