சென்னை: கதையின் நாயகர்களாக சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. இது வரும் மே மாதம் திரைக்கு வருகிறது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் ரோஷிணி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் அறிவியல் சார்ந்த புனைவுக்கதை எழுதும் மூத்த எழுத்தாளர் வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ஆனந்த் ஜி.கே ஒளிப்பதிவு செய்ய, கே.சி.பாலஸ்ரங்கன் இசை அமைத்துள்ளார். பேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.