யானைகளின் சத்தத்தால் அதிர்ச்சி அடைந்தேன்: மாளவிகா மோகனன்

திருவனந்தபுரம்: தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’, தமிழில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில் தேக்கடியை சுற்றிப் பார்த்த அனுபவம் குறித்து கூறியதாவது: அங்குள்ள அடர்த்தியான காட்டில் வசிக்கும் பறவைகளின் இனிய குரலை தினமும் கேட்ட பிறகுதான் தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.

இனிமையான காட்டுப்பூக்களின் மணம் பரவிய காற்றை சுவாசித்தேன். காலையில் எழுந்தவுடன் வெறும் கால்களில் புல்லில் நடப்பது, இயற்கை ஒலிகளுக்கு மத்தியில் அமைதியாக உறங்குவது எல்லாமே எனது வாழ்க்கையில் ஒரு இனம் புரியாத மேஜிக்காக இருந்தது.  நகரங்களில் கிடைக்கின்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு பதிலாக, இங்கு கனிம வளங்களால் ஆன நீரை குடிப்பது, காலையில் எழுந்து பார்க்கும் போது மயில், வான்கோழி போன்றவை குடிசையை சுற்றி வருவது எல்லாமே அதிசயமாக இருந்தது.

உலகின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான தேக்கடியில் எனது நாட்கள் அதிக சந்தோஷத்துடன் கழிந்தது. இரவில் வெகுதூரத்தில் யானைகளின் சத்தத்தை கேட்டபோது நானும், இன்னொரு நடிகையும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த காட்டில் சில நாட்கள் வாழ்ந்தது என்பது, என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய மாயாஜாலம் போல் இருக்கிறது.

Related Stories: