சென்னை: பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலசந்திரன் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் 3வது படம், ‘ரெட்ட தல’. அருண் விஜய் ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் நடிக்கின்றனர். ‘மான் கராத்தே’ கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். டாக்டர் எம்.மனோஜ் பெனோ நிர்வாக தயாரிப்பு பொறுப்பு ஏற்றுள்ளார்.
டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். அருண் சங்கர் துரை அரங்கம் அமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இப்படத்துக்காக சாம் சி.எஸ் இசையில் தனுஷ் பாடிய பாடல் வெளிநாட்டில் படமானது. விரைவில் லிரிக்கல் வீடியோ வெளியிடப்படுகிறது. தற்போது தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ என்ற படத்தில் அருண் விஜய் நடிப்பது குறிப்பிடத்தக்கது.