முதியவர் மர்ம சாவு

கும்மிடிப்பூண்டி: சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எதிரே அரசு மதுபான கடை மற்றும் அனுமதி பெறாமல் இயங்கும் பார் மார்களில் தினந்தோறும் இரவு பகலாக விற்பனை செய்து வருவது வழக்கம். இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே மதுபான கடையை அகற்ற வேண்டும் எனவும் அனுமதியின்றி செயல்படும் பார்களை மூடவும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று காலை டாஸ்மார்க் அருகே உள்ள சிப்காட் மின் வாரிய இடத்துக்குட்பட்ட கீழே போடப்பட்டுள்ள மின்கம்பம் மீது 50 வயது தக்க ஆண் சடலம் இருப்பதாக சிப்காட் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் பெயர் தெரியாத 50 வயது தக்க ஆண் சடலம் அருகே மது பாட்டில்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்தது. புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர். …

The post முதியவர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Related Stories: