கடம்பாடியில் மாரி சின்னம்மன் கோயில் தீமிதி திருவிழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடம்பாடி மாரி சின்னம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் மாரி சின்னம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை, இந்து சமய அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. இங்கு, ஆண்டு தோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.  இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரி சின்னம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் காலை மாரி சின்னம்மனுக்க சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், மாலை சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர், கோயில் வளாகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. தொடர்ந்து, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்….

The post கடம்பாடியில் மாரி சின்னம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: