சென்னை: 9 சர்வதேச விருதுகள் உள்பட 34 விருதுகளை பெற்றுள்ளது ஹன்னா குறும்படம். இதற்கு முன் 2022ல் ஷஷ்தி, 2023ல் சரஸ் ஆகிய குறும்படங்களும் இதேபோல் 200க்கும் மேற்பட்ட விருதுகளுடன் சர்வதேச திரைப்ப விழாக்களில் கவுரவிக்கப்பட்டன. இந்த 3 படங்களையுமே கேத்தி அண்ட் ரேப்பி பிலிம்ஸ், ஜூட் பீட்டர் டேமியன்ஸ் பிலிம்ஸ் இணைந்து தயாரித்தன. ஹன்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகைகள் ஐஸ்வர்யா, நீலிமா ராணி உள்பட பலர் பங்கேற்றனர். இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் பேசும்போது, ‘முதல் இரண்டு படங்களில் கதையில் அதிக முக்கியத்துவம் தந்தோம். இதில் கதையுடன் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறோம்’ என்றார். ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘குறும்படங்களை இயக்கி தவறுகளை சரி செய்துகொள்வதன் மூலம் பெரிய படத்துக்கு நம்மை தயார் செய்துகொள்ளலாம். அதை திறம்பட செய்திருக்கிறார் ஜூட் பீட்டர்’ என்றார்.