சட்டீஸ்கரில் நடந்த மோசடி: சன்னி லியோன் பெயருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை; சிக்கும் அதிகாரிகள்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் அரசு வழங்கும் 1000 ரூபாய் உதவித் தொகை நடிகை சன்னி லியோன் பெயரில் மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதில் நடிகை சன்னி லியோன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கும் இருந்தது. அந்த கணக்கிற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது. பல மாதங்களாக இந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வந்த அதிகாரிகள், சமீபத்தில் இது போலி கணக்கு என்பதை கண்டறிந்தனர்.

அந்த வங்கிக் கணக்கில் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து விசாரித்ததில் பஸ்தார் பகுதியில் தலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் வீரேந்திர ஜோஷி என்பவர் சிக்கினார். திருமணமாகாத இவர், தனியாக வசித்து வந்தார். அரசு உதவித் தொகை பெறுவதற்காக போலியாக வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பெண்களுக்கான உதவித் தொகையை இவர் பெற்று வந்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து போலி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட கலெக்டர் ஹரீஷ் உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட வீரேந்திர ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆவணங்களை சரிபார்த்து உதவித் தொகைக்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: