டிசம்பர் 12ல் ரீரிலீசாகும் தளபதி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் 50வது திரைப்பட விழாவை கொண்டாடும் வகையில் வருகிற டிசம்பர் 12ம் தேதி தளபதி படம் ரீ ரிலீசாகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோர் நடித்த படம் இது. இளையராஜா இசையில் உருவான ‘தளபதி’ மெகா ஹிட் திரைப்படத்தை 4 கே டிஜிட்டல் வடிவமாக மாற்றம் செய்து எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷன் தமிழ் நாட்டில் 150க்கு மேலான திரையரங்குகளில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.

இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இப்படத்தில் இளையராஜா இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. குறிப்பாக மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் ‘ராக்கம்மா கைய தட்டு’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ ஆகிய பாடல்கள் இசையுலகில் சிறந்த இடத்தை பிடித்தவை. இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். இன்றைய தலைமுறையும் இதை கொண்டாடும் வகையில் படம் ரீரிலீசாகிறது.

Related Stories: