வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி?

சென்னை: தமிழில் வெளியான ‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’, இந்தியில் ‘சர்ஃபிரா’ ஆகிய திரைப்படங்களை எழுதி இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து ‘புறநானூறு’ என்ற படத்தை எழுதி இயக்குகிறார். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கதை தொடர்பாக சுதா கொங்கராவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது 25வது படமாக ‘புறநானூறு’ படத்தில் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படமாகும். இதில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில், கதை கேட்ட ஜெயம் ரவி, தனது வேடத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், இதில் நடிப்பது சவாலாக இருக்கும் என்றும் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

Related Stories: