விம்பிள்டன் பைனலில் இன்று ஆன்ஸ் – எலனா மோதல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில்  முதல் முறையாக ஆன்ஸ் ஜெபர் – எலனா ரைபாகினா மோதுகின்றனர். நடப்பு தொடரில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் (போலாந்து) உள்பட முன்னணி வீராங்கனைகள் பலரும் காலிறுதி, அரையிறுதிக்கு முன்பே  வெளியேறிய நிலையில், முன்னாள் சாம்பியன் ஹாலெப் (30 வயது, 18வது ரேங்க்) அரையிறுதி  வரை முன்னேறியதால் அவர் சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் முதல் முறையாக அரையிறுதியில் விளையாடிய  எலனா ரைபாகினாவிடம் (கஜகஸ்தான், 23 வயது, 23வது ரேங்க்) 3-6, 3-6 என நேர் செட்களில் வீழ்ந்தார். மற்றொரு அரையிறுதியில்    துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் (27 வயது, 2வது ரேங்க்), ஜெர்மனியின் தட்ஜனா மரியா (34 வயது, 103வது ரேங்க்) மோதினர். இருவருக்கும் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி புதுசு  என்றாலும், ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் ஜெபர் 2-1 என்ற  செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறியுள்ளார்.புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இன்று நடைபெறும்இறுதிப் போட்டியில்    எலனா – ஆன்ஸ் மோதுகின்றனர். இருவருக்கும் இதுதான் முதல் கிராண்ட் ஸ்லாம் பைனல் என்பதால், பட்டம் வெல்ல கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை….

The post விம்பிள்டன் பைனலில் இன்று ஆன்ஸ் – எலனா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: