மீனம்

சந்திரன் சஞ்சாரம் காரணமாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வார மத்தியில் திடீர் பயணங்கள் இருக்கும். மாமியார் மருமகள் இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும் நல்லுறவு மலரும். சூரியன் புதன் அமைப்பு காரணமாக நிறை குறைகள் இருக்கும். வயிறு சம்பந்தமாண உபாதைகள் வந்து நீங்கும். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல பகுதியில் வசதியான வீடு அமையும். சகோதரி திருமண விஷயமாக முக்கிய சந்திப்பு களும் நல்ல முடிவுகளும் வரும். பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்களும் பிரச்னைகளும் வர வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வது அவசியமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம்.

பரிகாரம்: தினமும் காலை மாலையில் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்து பிரார்த்திக்கலாம். இல்லாதோர் இயலாதோருக்கு இயன்றதை செய்யலாம்.