கடகம்

ராசியில் சூரியன் புதன் இருப்பதால் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட  நாட்களாக வசூல் ஆகாமல் இருந்த பெரிய தொகை வட்டியுடன் கைக்கு வரும். செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய அனுமதி கடிதங்கள் கைக்கு வரும். உத்தியோக வகையில் எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள். சுப விஷேசதிற்கான முகூர்த்த தேதியை முடிவு செய்வீர்கள். வாய் மூலம் பேசி தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். ராகுவின் அருள் காரணமாக நீண்ட நாட்களாக தடை பட்டவிஷயம் எதிர்பாராத வகையில் திடீரென்று கூடிவரும்.

பரிகாரம்: அச்சுதாய நம அனந்தாய நம கோவிந்தாய நம என 108 முறை சொல்லி வரலாம். வீட்டு மாடியில் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைக்கலாம்.