சனி வக்ரமாக இருப்பதால் எதிலும் தடைகள் தாமதங்கள் இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் எதையும் அணுகுவது நல்லது. செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை காரணமாக நிறைகுறைகள் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக குடும்பத்தினரிடையே ஒருமித்த கருத்து உண்டாகும் அதனால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். அலுவலகத்தில் வேலையில் கவனம் தேவை. பிறரை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம். கேது 7-ல் இருப்பதால் சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல அனுபவஸ்தர்கள் வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. நீண்ட நாள் நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். விசா எதிர்பார்த்தவர்களுக்கு வாரக்கடைசியில் கிடைக்கும்.