மகரம்

ராசியில் சனி வக்ரமாக இருப்பதால் குழப்பங்கள் மன அழுத்தம் வந்து நீங்கும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல படியாக முடியும். தாத்தா பாட்டியிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சூரியன் புதன் சஞ்சாரம் காரணமாக நிறை குறைகள் இருக்கும். செவ்வாய் சுக்கிரன் பார்வை காரணமாக வர வேண்டிய குத்தகை பாக்கிகள் வாடகை பாக்கி கைக்கு வரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. பங்குவர்த்தகத்தில் உங்கள் கணிப்புகள் சரியாக அமையும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். புதிய வேலையில் சேருவதற்கான கால நேரம் கூடி வந்துள்ளது.

பரிகாரம்: யோகிராம்சுரத்குமார் ரமணர் போன்ற மகான்களை நினைத்து தியானம் செய்யலாம். வீட்டு வேலை செய்யும் ஏழை பெண்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவலாம்.