கன்னி

சந்திரன் பார்வை காரணமாக எதிர்பார்த்த தொகை புதன்கிழமை கைக்கு வரும். புதன் சனி பார்வை காரணமாக நிறைகுறைகள் இருக்கும். மருமகள் கர்ப்பமடைந்த இனிக்கும் செய்தி வரும். கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தவர்கள் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் ஒருமித்த கருத்து உண்டாகும். நீண்ட நாட்களாக விரதம் இருந்து எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் இப்போது அமையும். குரு வக்ரமாக இருப்பதால் உத்தியோக வகையில் திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. சகோதரி திருமண விஷயமாக உறவினரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

பரிகாரம்:  தினமும் ஸ்ரீராம ஜெயம் 108 முறை எழுதி வரலாம். பசுவிற்கு பழ வகைகள் கீரை வகைகள் வாங்கி வழங்கலாம்.