திருச்சுழி அருகே பரபரப்பு கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியர் அடித்து கொலை: 43 வயது மனைவி 22 வயது வாலிபருடன் கைது

திருச்சுழி: திருச்சுழி அருகே, கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொன்றது தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (45). மின்வாரிய ஊழியர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ்நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். திருச்சுழி  போலீசார் விபத்தா, கொலையா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலிருந்து நேராக முத்துராமலிங்கம் வீட்டிற்கு சென்றது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில், முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம் (43) விசாரணை நடத்தினர். இதில், சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்குழந்தை அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்துடன் குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது. முத்துராமலிங்கம் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். ஓராண்டுக்கு முன், முத்துராமலிங்கத்திற்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. மதுரை அரசரடியில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்தார். சமயம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து சென்றார்.இந்நிலையில், சுனிதாவுக்கு, கணவர் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மலையரசன் (22) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது முத்துராமலிங்கத்துக்கு தெரியவே, மனைவியை கண்டித்தார். இதையடுத்து சுனிதா தூண்டுதலின்பேரில், மலையரசன் தனது நண்பர் சிவா (23)வுடன் சேர்ந்து, கடந்த 1ம் தேதி இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை டூவீலரில் வைத்து நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ்நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டு இறந்ததைப் போல போட்டுவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுனிதா, மலையரசன், சிவா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்….

The post திருச்சுழி அருகே பரபரப்பு கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியர் அடித்து கொலை: 43 வயது மனைவி 22 வயது வாலிபருடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: