மும்பை: அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா 2’, தனுஷுடன் ‘குபேரா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’, விக்கி கவுசலுடன் ‘சாவ்வா’, ‘தி கேர்ள் பிரெண்ட்’, ‘ரெயின்போ’ ஆகிய பான் இந்தியா படங்களில் பிசியாக நடித்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா. கடந்த சில நாட்களாக அவர் எந்த பொதுநிகழ்ச்சிலும், திரைப்பட விழாக்களிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறுகையில், ‘சில நாட்களாக நான் எந்த சமூக வலைத்தளத்திலும் ஈடுபடவில்லை. எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. கடந்த மாதம் ஆக்டிவ்வாக இல்லாததற்கு காரணம், சமீபத்தில் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டதுதான். தற்போது தலையை மட்டுமே தூக்க முடிகிறது. என் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது என் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன்.
உங்களை கவனித்துக்கொள்ள எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. அது சுலபமாக உடைந்துவிடக்கூடியது. நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. எனவே, ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தை மட்டுமே தேர்வு செய்யுங்கள்’ என்றார். அவரது பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் பூரண நலம்பெற வேண்டும் என்று கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
The post திடீர் விபத்தில் சிக்கிய ராஷ்மிகா: ‘நாளை என்ன நடக்கும் தெரியாது’ என்று பதிவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.