13 மொழிகளில் வெளியாகும் “மார்டின்” திரைப்படம்!!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் கே மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் ஏபி அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா பேசுகையில்… பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக  மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகர் அர்ஜூன் சர்ஜா பேசுகையில்…
என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார்.

100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய  பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி.

நடிகை வைபவி பேசிகையில் …
இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், எங்கள் படத்தின் பாடலை பார்த்துள்ளீர்கள், இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் துருவா சர்ஜா பேசுகையில்…
தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள், இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது.  உலகமெங்கும் 13 மொழிகளில், வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

The post 13 மொழிகளில் வெளியாகும் “மார்டின்” திரைப்படம்!! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: