திடீர் உடல் நலம் பாதிப்பு: அமெரிக்கா சென்றார் ஷாருக்கான்

மும்பை: உடல் நலம் திடீர் பாதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார் ஷாருக்கான். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தபோது, ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக ஷாருக்கான் பாதிக்கப்பட்டார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவர் சிகிச்சைக்காக சென்றார். ஏற்கனவே ‘ஹீட் ஸ்ட்ரோக்’கால் பாதிக்கப்பட்டதற்காக அவர் சிகிச்சை பெற சென்றார் என சிலரும், கண் பிரச்னை காரணமாக அவர் சென்றார் என வேறு சிலரும் தகவல் பரப்பினர். ஆனால் ஷாருக்கான் தரப்பிலிருந்து இதற்கான பதில் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில் நேற்று திடீரென அவர் அமெரிக்கா சென்றுவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பு நிலவியது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் சென்றிருப்பதாகவும் சீக்கிரமே நாடு திரும்புவார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

The post திடீர் உடல் நலம் பாதிப்பு: அமெரிக்கா சென்றார் ஷாருக்கான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: