இளையான்குடி பகுதியில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் வர்ணம் பூச கோரிக்கை

இளையான்குடி: இளையான்குடி பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில் ஒளிரும் வர்ணம் பூச வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் முக்கிய சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிகள், இணைப்பு சாலைகள் மற்றும் சாலை வளைவுகள் அருகே விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேகத்தடைகளில் இரவு நேரங்களில் ஒளிரும் பெயின்ட் பூசப்படவில்லை.இதனால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெரியாததால் அவற்றை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, வேகத்தடைகளில் ஒளிரும் வண்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post இளையான்குடி பகுதியில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் வர்ணம் பூச கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: