சங்கராபுரம் அருகே மர்ம குழி தோண்டி மூடல்: ஆய்வு செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி  மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பாக்கம்புதூர் கிராமத்தில்  சங்கராபுரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மயானம் உள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மர்ம குழி ஒன்று  தோண்டி மூடப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்தக்குழியில் என்ன உள்ளது என்பது குறித்து ஆய்வு  செய்யவேண்டும் என பாக்கம்புதூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில்  கடந்த 2நாட்கள் ஆகியும் அந்த மர்மக்குழியை தோண்டி ஆய்வு செய்யாததால்  ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சங்கராபுரம்-திருவண்ணாமலை  சாலையில் உள்ள புதூர் கூட்டுச்சாலை மற்றும் மயானம் அருகே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணை  கண்காணிப்பாளர் பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மர்ம குழி  தோண்டி பார்க்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை  கைவிட்டனர்.  எனினும் மறியலால் சங்கராபுரம்-திருவண்ணாலை நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post சங்கராபுரம் அருகே மர்ம குழி தோண்டி மூடல்: ஆய்வு செய்யக்கோரி பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: