அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் டிபன் கேரியர் ஆகியவற்றை இலவசமாக தலைமை ஆசிரியர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில், ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில், கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் இதுவரை புதிதாக சேர்ந்த 343 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் டிபன் பாக்ஸ் கேரியரை பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நேற்று முன்தினம் வழங்கினார். அப்போது, அவருடன் மாவட்ட திட்ட கல்வி அலுவலர் அப்துல்கரீம், ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் appeared first on Dinakaran.

Related Stories: