எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்; சுற்றுலாத்துறை முடிவெடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் ஹோட்டல் நடத்த கடந்த 1996ல் 30 வருட குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குத்தகை பணத்தை ஓட்டல் நிறுவனத்தினர் முறையாக வழங்காமல் ரூ.38.85 கோடி பாக்கிதொகை நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் ஓட்டலின் குத்தகை காலம் கடந்த 13.6.2024 உடன் முடிவடைந்தது. மீண்டும் ஓட்டல் குத்தகையை நீட்டிக்கக் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக் கோரியும், குத்தகையை நீட்டிக்கக் கோரியும் எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் ஐகோர்ட் மதுரைகிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிறப்பித்த உத்தரவு: குத்தகையை நீட்டிக்க கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குத்தகை விண்ணப்பத்தின் மீது சுற்றுலாத் துறை முதன்மை செயலர் உரிய முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

The post எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்; சுற்றுலாத்துறை முடிவெடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: