×

கும்பம்

கும்பம்: இந்த வாரம் ஆதாயம், அனுகூலம் உள்ளதாக அமையும் சனி, குரு இருவரின் காரணமாக எதிர் பார்த்த தொகை அசல், வட்டியுடன் வந்து சேரும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். புதன், ராகு, சுக்கிரன் மூவரின் சேர்க்கை காரணமாக சொந்த பந்தங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிர் பார்த்த தகவல் திங்கட் கிழமை வரும். பெண்களுக்கு வயிறு, கருப்பை சம்மந்தமான உபாதைகள் வரவாய்ப்புள்ளது உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு தீபங்கள் ஏற்றி வணங்கலாம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம்.

Tags :
× RELATED கும்பம்