கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டம்: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார்

சென்னை:  கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கான தடையை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கக்கூடிய கோயம்பேடு மார்க்கெட்டில் அதிக அளவில் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்காக அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி பிளாஸ்டிக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதில், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதுவரை, அபராத தொகையாக ரூ.10 லட்சத்து 22 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 3,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அதிகமாகக் கூடும் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.10 நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை தரும் இயந்திரத்தை பூ மார்க்கெட்டில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கிவைத்தார். மேலும், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களை மெஷினில் செலுத்தினால் பொருட்கள் கிடைக்கும் மற்றொரு இயந்திரத்தையும் தொடங்கி வைத்தார். இந்த இயந்திரத்தின் வெற்றியை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் பங்களிப்புடன் மஞ்சப்பை இயந்திரங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்….

The post கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டம்: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: