கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில் இளைஞர்களுக்கான கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி: காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம்: கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில் இளைஞர்களுக்கான கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி குறித்த செய்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. திருப்போரூர் அருகே கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி. கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி அளித்தல் குறித்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து  காணொலி காட்சி மூலம் நேற்று காலை துவக்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து திட்டத்தின் செய்முறை விளக்க நிகழ்ச்சியான கடலில் குளிக்க சென்றோ அல்லது ஏதோ வகையில் யாராவது கடலில்  சிக்கி தவித்தால், அவர்களை  காப்பாற்றுவது மற்றும் சிகிச்சையளிப்பது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி,  திருப்போரூர் அடுத்த கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு  மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எல்.இதயவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் சோபனாதங்கம் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டு ஒத்திகை  நிகழ்ச்சியை பார்வையிட்டனர்….

The post கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில் இளைஞர்களுக்கான கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி: காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: