×

தனுசு

சூரியன், புதன் இருவரும் பலமாக இருப்பதால் உங்கள் திட்டங்கள் எல்லாம் சாதகமாக கூடி வரும். தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சிறப்புச் சலுகைகள் கிடைக்கும். செவ்வாயின் பார்வை காரணமாக நிறை குறைகள் இருக்கும். சொந்த பந்தங்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நலம் தரும். வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றி செய்தி உண்டு. சந்திரன் சஞ்சாரம் காரணமாக வியாபாரம் சம்பந்தமான கொள் முதல்பயணங்கள், பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்கள் நல்லபடியாக முடியும்.

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வணங்கலாம். பக்தர்களுக்கு பழ வகைகளை பிரசாதமாக தரலாம்.

Tags :
× RELATED தனுசு